Sunday, October 1, 2017

காராள கவுண்டர்



யார் இந்த #காராளன்

கல்லிலே நெல் விதைத்தாலும்
நெல் எடுப்பவன் காராளன்.

முதன் முதலில் ஏர் உழுதவன் காராளன் அந்த காராளன் பெருமையை பறைசாற்றும் வகையில் காராளன் வள்ளி என்ற ஒரு இடமும் உள்ளது அதாவது கொல்லிமலை அடிவாரமான தற்போதைய #காராவள்ளி
ஆங்கிலேய ஆட்சி காலத்தில்தான் நம்மை மலையாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டன அதற்கு முன்பு கொங்கு வெள்ளாளர்ராக இருந்து மலைகளில் இருப்பதனாலே மலையாளிகள் என்ற பெயர் வந்தது மலையாளி என்பது சாதி கிடையாது உண்மையான எங்கள் சாதி காராளன் என் இன மக்களை போன்று வேளாண்மை யாராலும் செய்ய இயலாது என் இன மக்கள் இன்றும் வேளாண்மையையே மட்டுமே பெரிதும் நம்பி வருகின்றனர்  நான் காராளன் வம்சம் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்

வெதை வெதைத்தவன் வெள்ளாளன்
கலப்பை பிடிச்சவன்  #காராளன்.

என் இனம் விவசாயத்தை அறிமுகப்படுத்திய இனம் என்பதில் பெருமையடைகிறேன் கொல்லிமலை ,பச்சை மலை,கல்வராயன் மலை முழுக்க என் காராள கவுண்டர்கள்் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.....


காராள கவுண்டர் ஏர் கட்டுதல்




முகூர்த்த ஏர் கட்டுதல் –காராள கவுண்டர் ( மலையாளிகள)் முதல் வருட அறுவடையை முடிந்து அடுத்த வருடத்திற்கான விதைப்பிற்காக நிலத்தை உழுவதற்கும் கொத்துவதற்கும் முன்பாக முகூர்த்த ஏர் கட்டுதல் என்ற சடங்கைச் செய்து முடிக்கிறார்கள். புதிய உழவுக்கும் புதிய விதைப்பிற்கும் சரியான தருணம் எதுவென்று முடிவெடுத்துக் காட்டிலோ வயலிலோ முதன்முதலாக உழவு ஏர் கட்டப்படுகின்றது. இதனையே முகூர்த்த ஏர் என்கிறார்கள். இந்த ஏரை ஊர் பூசாரி கட்டுகிறார். பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிதான் முகூர்த்த ஏரைக் கட்டுகிறார். முகூர்த்த ஏரை கட்டுவதற்குரிய செய்தியை முதல் நாள் தண்டோரா மூலமாக ஊராருக்கு அறிவிப்பார்கள். முகூர்த்த ஏர் கட்டுகின்ற நாளன்று வீட்டில் அடுப்பு எரிக்க மாட்டார்கள். பயறு வேக வைக்க மாட்டார்கள். குளிக்கவோ துணிதுவைக்கவோ கூடாது. வேலை செய்யக் கூடாது. காடு அழிச்சு நெருப்பு மூட்டக் கூடாது. இந்த நடைமுறைகளைக் கடைபிடிக்காதவர்கள் சம்பிரதாயத்தை மீறிய குற்றத்திற்காகப் பஞ்சாயத்தார் முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையை ஏற்கிறார்கள்.

காராள கவுண்டர் வசிக்கும் இடங்கள்




காராள கவுண்டர்கள் வாழும் இடம்

கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை “சதுரகிரி” என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்கு மற்றும் தென்மேற்குப்பகுதியாக நாமக்கல்லும் வடகிழக்குப் பகுதியாக இராசிபுரம் வட்டமும் வடக்கே சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டமும், மேற்கே திருச்சி மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டு தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர பகுதிக்கு இணையாக சுமார் 503 ச.கி.மீ. அளவுக்குப் பரவியுள்ளது.
இதன் அடிவாரப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 180 மீ. உயரத்திலும் சமவெளிப்பகுதி 1415 மீ. உயரத்திலும் இம்மலையின் அதிகபட்ச உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1550 மீ ஆகும். ஆனாலும் இதன் சமவெளிப் பரப்பானது 1000 மீ. உயரம் உள்ளது. சராசரி மழையளவு 1318 மி.மீ. கொல்லிமலை தென்மேற்கு பருவ மழையின்போது அதிக அளவு மழையை பெறுகிறது (719 மி.மீ). கொல்லிமலையின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச தட்பவெப்பநிலை 18° C மற்றும் 37° C. இதன் மொத்தப் பரப்பளவில் 271 ச.கி.மீ வனப்பகுதியாகவும் 232 ச.கி.மீ. வனமல்லாத நிலங்களாகவும் உள்ளது. இதன் வனப்பகுதி பசுமைமாறா காடுகள், பாதி பசுமைமாறா காடுகள், இலையுதிர் காடுகள், முட்புதர் காடுகள் என பலவகைக் காடுகளைக் கொண்டுள்ளது.
சுமார் 203 ச.கி.மீ. அளவுக்கு முட்புதர் காடுகள் பரவியுள்ளது. வனமல்லாத பகுதிகளில் சுமார் 50 சதவிகிதம் தரிசு நிலங்களாக உள்ளது. அரியலூர்சோலை, குண்டூர்நாடு மற்றும் புளியஞ்சோலை ஆகிய 3 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை தமிழ் நாட்டு வனத்துறை பராமரித்து வருகிறது. கொல்லிமலை தனி ஊராட்சி ஒன்றியமாக 247 குக்கிராமங்களை உள்ளடக்கிய 14 ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. செம்மேடு இதன் தலைமை இடமாக உள்ளது.

சேர்வராயன்மலை

சேர்வராயன் மலை தமிழ் நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்காக சேலம் மாவட்டத்தில் ஏற்காடு வட்டத்தில் (Taluk) அமைந்துள்ளது. இம்மலையானது சேலம் மாநகரத்திலிருந்து வடக்கே சுமார் 27 கி.மீ தூரத்தில் உள்ளது. இம்மலையின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1612 மீ. ஆகும். சுமார் 45 கி.மீ நீளம் 30 கி.மீ. அகலமும் கொண்ட இதன் பரப்பளவு 382.67 ச.கி.மீ ஆகும். இம்மலையில் ஆங்காங்கே நிறைய பள்ளத்தாக்குகள் உள்ளது. காடுகளில் உருவாகும் சிற்றருவிகள் நிறைய உள்ளது. இருப்பினும் இவைகள் பெரும்பாலும் மழைபெய்யும் காலங்களில் மட்டுமே காண இயலும். காவேரி நதிக்குத் துணை ஆறுகலான திருமணிமுத்தாறு மற்றும் சரபங்கநதி சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகி காவேரி ஆற்றுடன் கலக்கின்றன. சுமார் 1.5 மீ. ஆழம் கொண்ட சுண்ணாம்பு கலந்த பழுப்பு மண் (Brown Calcareous Soil) வகையைக் கொண்டது இம்மலை.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் இம்மலை வெகுவாகப் பயனடைகிறது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை மிகவும் கைகொடுக்கிறது. மழைபொழிவு ஆண்டுக்கு சராசரி 60 முதல் 115 நாட்கள் உள்ளது. இங்கு சராசரி மழை அளவு 1750 மி.மீ.
1940 – ஆம் ஆண்டுவரை சேர்வராயன் மலையானது இங்கு வசிக்கும் பழங்குடி இனமக்களால் சேலநாடு (சேர்வாராயன் கோவிலுக்கு தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி) மூட்டநாடு (சேர்வராயன் கோவிலை ஒட்டிய பகுதி) மோகநாடு (கோவிலின் வடக்குப்பகுதி) எனவும் பெயரிட்டு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பழங்குடி இன மக்களின் தலைவரைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. அவரது மறைவுக்குப்பின் ஏற்பட்ட சச்சரவுகளால் 1842 – ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு சேர்வராயன் மலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
சேலம் வட்டத்திலிருந்து தனியே ஏற்காடு பிரிக்கப்பட்டு 15.10.1997 முதல் தனி வட்டமாக இயங்கி வருகிறது. நிர்வாக ரீதியில் 67 வருவாய் கிராமங்களைக் கொண்டும் 3 பிர்காக்கள் (ஏற்காடு, வெள்ளக்கடை, புத்தூர்) கொண்டும் ஏற்காடு வட்டம் 9 ஊராட்சிகளையும் கொண்ட தனி ஊராட்சி ஒன்றியமாகவும் உள்ளது. ஏற்காடு மற்றும் நாகலூர் ஊராட்சியில் ஓரளவும் ஏனைய அனைத்து ஊராட்சிகளிலும் மலைவாழ் மக்கள் வாசித்து வருகின்றனர். இம்மலையில் வாழும் மொத்த மக்கள்தொகை 40000 (2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). இதில் மலைவாழ் மக்கள் 24,449 மக்கள் வாழுமிடம் 151.71 ச.கி.மீ. பரப்பளவிலும், 230.96 ச. கி.மீ. பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட காடுகளும் உள்ளது.

கல்வராயன்மலை
கல்வராயன் மலை 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. இதன் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும், நடுப்பகுதி மற்றும் மேற்கு பகுதி விழுப்புரம் மாவட்டத்தின் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் உள்ளது. இம்மலையைச் சுற்றியுள்ள சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கோமுகி, மணிமுத்தாறு மற்றும் கரியகோயில் ஆறுகளுக்கு கல்வராயன்மலை நீர்பிடிப்புத் தளமாக உள்ளது. இம்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 மீ. உயரத்திற்கு புதர் காடுகளும் அதற்கு மேல் 800 மீ முதல் 1300 மீ. வரை இலையுதிர் காடுகளையும் இதன் சமவெளியில் சில பகுதிகளில் அடர்ந்த பசுமைமாறா காடுகளையும் கொண்டுள்ளது.
கல்வராயன் மலை 5 “நாடுகளைக்” கொண்டது. (பல கிராமங்களைக் கொண்ட தொகுப்பு நாடுகள் என்று குறிப்பிடப்படுகிறது). அவைகள்: 1. பெரியகல்ராயன்நாடு (மேற்கு பகுதி), 2.சின்னகல்ராயன்நாடு (வடக்குப்பகுதி), 3. ஜடையகவுண்டன்நாடு (தெற்கு மற்றும் மேற்கு பகுதி), 4. குறும்பக்கவுண்டன்நாடு (மத்தியப்பகுதி), 5. அரியகவுண்டன் நாடு (வடபகுதி). சுமார் 271 குக்கிராமங்களையும் 79 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது இம்மலை.

பச்சமலை

பச்சமலை சேலம், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பரவியுள்ளது. ஏனைய மலைதொடர்களைக் காட்டிலும் இம்மலை பசுமையாக இருப்பதால் இதற்கு பச்சைமலை என்று பெயர் வரப்பெற்றது. இம்மலையிலிருந்து கல்லாறு, சுவேத நதி ஆகியன உற்பத்தி ஆகின்றன. வீரராமர் அணைக்கட்டு கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இம்மலையில் மங்களம் அருவி கோரையாறு நீர்வீழ்ச்சி, மயிலூத்து நீர் வீழ்ச்சி ஆகியன உள்ளன. இம்மலை சுமார் 1000 மீ. முதல் 1200 மீ. அளவு கடல் மட்டத்திலிருந்து உயரம் கொண்டது. பொதுவாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழையினாலும் ஜூன் முதல் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழையினாலும் ஆண்டுக்கு சுமார் 1250 மி.மீ. மழை பொழிகிறது. பெரும்பாலும் இங்கு வடகிழக்கு பருவமழையையே நம்பியுள்ளனர். இதன் தட்பவெப்பநிலை அதிகபட்சமாக 23°c முதல் 31°c வரையிலும் குறைந்தபட்சமாக 12°c முதல் 18°c வரையிலும் உள்ளது. சுமார் 27 சதவிகித நிலம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இதன் 2 கிராமங்கள் சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி ஒன்றியத்திலும் திருச்சி மாவட்டத்தின் உப்பில்லியாபுரம் ஒன்றியத்தில் 17 கிராமங்களும் 34 கிராமங்கள் துறையூர் ஒன்றியத்திலும் ஆக 53 குக்கிராமங்கள் உள்ளது. இம்மலை தென்பர நாடு, கோம்பைநாடு, வண்ணாடு முதலான நாடுகளைக் கொண்டுள்ளது. துறையூர், ஈசநாரி, பெரம்பலூர், கங்கவள்ளி, தம்மம்பட்டி, அரும்பாவூர், மலயாளப்பட்டி, தேதாவூர் மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய ஊர்கள் இம்மலையின் அடிவாரப்பகுதியில் உள்ளது. சுமார் 425 ச.கி.மீ. பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

ஜவ்வாதுமலை

தமிழ் நாட்டின் கிழக்குத்தொடர்ச்சி மலையின் உயிரியலின் தீவு (Biological Island)என்றே ஜவ்வாது மலையைச் சொல்லலாம். அந்த அளவிற்கு இம்மலையானது எண்ணற்ற தாவர வகைகளைக் கொண்டுள்ளது என்றாலும் இம்மலையில் குறிப்பிடத்தகுந்த அளவு தாவரங்கள் அழியும் நிலையிலும் அழிவின் விளிம்பிலும் உள்ளதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள். இங்கு சுமார் 800 வகை தாவரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மலையில் தன்னிச்சையாக வளரும் சந்தனமரம் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ளது. இதன் பகுதியான தென்மலையின் உச்சியில் உள்ள மேல்பட்டு சுமார் 1045 மீ. உயரம் கொண்டு இம்மலையின் சிகரமாக விளங்குகிறது. இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அம்ரிதி வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரமுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை கொண்டது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ. இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலம் கிடைக்கிறது. இம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு,கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன.

ஏலகிரிமலை

ஏலகிரி மலை தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. சுமார் 51 ச.கி.மீ. பரப்பளவில் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கே வாணியம்பாடி வட்டத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் தலைநகரின் கிழக்கே 92 கி.மீ. தூரத்திலும், திருப்பத்தூருக்கு மேற்கே 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இம்மலையில் ஒரே ஒரு வருவாய் கிராமமாக ஆதனவூர் உள்ளது. இக்கிராமத்திற்கு உட்பட்டு சுமார் 13 குக்கிராமங்கள் உள்ளது. இம்மலை 1050 மீ. உயரம் கொண்டது. இம்மலையின் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33° c மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 12° c. இங்கு சராசரி மழையளவு 1026.16 மி.மீ.
தென் மேற்கு மழையின்போது சுமார் 131.8 மி.மீ அளவும் வடகிழக்கு மழையின்போது 333.7 மி.மீ மழையும் கிடைக்கிறது.

சித்தேரிமலை

தமிழ்நாட்டின் கிழக்குமலைத் தொடர்ச்சிமலைகளில் ஒன்றான சித்தேரி மலை தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிபட்டி வட்டத்திலும், அரூர் வட்டத்திலும் இருக்கிறது. இம்மலை சுமார் 654.52 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மலையின் வடகிழக்காகவும், தென்மேற்காகவும் கல்லாறு, வரட்டாறு முதலான ஆறுகளும், கம்பாலை, ஆணைமடுவு போன்ற கணவாய்களும் உள்ளன. இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 39.5 c உம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 19 c யும் உள்ளது. சராசரி மழையளவு 620 முதல் 1400 மி.மீ வரை இருக்கிறது.
இம்மலையின் காடுகள் ஆறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள்: 1. பசுமைமாறா காடுகள் 143.14 ஹெக், 2. பாதி பசுமைமாறா காடுகள் 110360 ஹெக் 3. வெப்பமண்டல வறண்ட இலையுதிற்காடு 3650.15 ஹெக், 4. ஆற்றங்கரையோர காடுகள் 304.18 ஹெக். 5. வறண்ட இலையுதிர் காடுகள் 7407.66 ஹெக். 6. தென் பகுதி வறண்ட முட்புதற்காடுகள் 3605.15 ஹெக். மீதமுள்ள பகுதிகள் குடியிருப்புகளாகவும், வனத்தோட்டங்களாகவும் (மூங்கில்), தரிசு நிலங்களாகவும் காணப்படுகின்றன. சுமார்
131 மர வகைகளும், 81 சிறு செடியினங்களும், 46 வகை முறுக்குக்கொடியினங்களும், 33 வகை படற்கொடியினங்கள் மற்றும் 121 மூலிகைகளும் இம்மலையில் உள்ளன. இதில் சுமார் 212 வகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவைகள். சுமார் 60 வகைத் தாவரங்கள் பல்நோக்குப் பலன் தருபவைகள் (உணவு, மருத்துவம், மற்றும் இதர வகை), 24 வகைத் தாவரங்கள் குறிப்பாக மூலிகை மற்றும் உணவுக்காக பயன்படுத்தத் தக்கவை. 63 வகைத் தாவரங்கள் மூலிகைகளாகப் பயன் தருபவை. சுமார் 15 இனங்கள் உணவுக்காகவும், 16 இனங்கள் விறகு, தீவனம் மற்றும் மரப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தக்கூடியதாகும்.

பாலமலை

சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகத்தில் கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் பாலமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 4,000 மீட்டர் உயரத்தில் இந்த மலை உள்ளது. பாலமலையைச் சுற்றி, 33 வன கிராமங்கள் உள்ளது. இம்மலையில் 1178 குடும்பங்கள் (5,000-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள்) வசித்து வருகின்றன.

காராள கவுண்டர் சம்பிரதாயம்




காராளர் சாங்கியமும் சமர்தாயமும்:
எங்கள் காராளர் மக்கள் நல்லவை கெட்டவையாவும்  பட்டக்காரர் முன்னிலையில்தான்  நடக்கும் . எந்த ஒரு விசேசங்களும் இவர் முன்னிலையில்தான் நடக்கும் திருமணமும் இவர் முன்னிலையில் பட்டக்காரர் தாலியினை எடுத்து தர மாப்பிளை கட்டுவார். கொங்கு சமுதாயத்தில் இவரை புடவைகாரர் என்றும் அழைப்பர்.
பட்டக்காரர் க்கு கீழ் உள்ளவர்கள் நாட்டார், காரியகாரர், ஊர்கவுண்டர், கங்காணி, மூப்பன் இவர்கள் பட்டக்காரர்க்கு அடுத்து உள்ள அதிகாரிகள் பட்டக்காரர் தலைமையில்தான் இவர்கள் யாவரும் செயல்படுவார்கள். எங்கள் காராளர் இனத்தில் ஆணோ பெண்ணோ தன் இனத்தை தவிர பிற வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டால் பட்டக்காரர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரியின் முன்னிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். மேலும் ஊரில் நடக்கும் எவ்வித விசேசங்களிலும் கலந்து கொள்ள முடியாது காராளர் வணங்கும் கோவில் உள்ளே வரவும் முடியாது பிற சாதிக்காரர்களும் எங்கள் கோயில் உள்ளே விடமாட்டார்கள் இப்படிப்பட்ட எங்கள் காராளின் பெருமை பற்றி  கீழ் உள்ளவர்களுக்கு என்ன தெரியும் ஆயிரம் ஆண்டு கடந்தாலும் எங்கள் காராளரின் பழக்கவழக்கம் என்றும் மாறாது.
ஆனால்  மலையைவிட்டு கீழே சென்ற மக்கள் பலபட்டரை சாதிகளிடம் கலந்து காராளனின் பெருமையினை சீரழித்துவருகின்றனர். இன்னமும் மலையில் உள்ள எங்கள் காராள மக்களின் பண்பாடு கலாச்சாரம் பற்றி கீழ்நாட்டில் உள்ள எந்த மக்களுக்கும் தெரியாது . நாட்டு கவுண்டர் வெள்ளாள கவுண்டர் காராள கவுண்டர்(மலையாளி) இந்த மூவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இந்த மூவருமே ஒரே இனமான காராள கவுண்டர்கள் ஆவார் இதை பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.
நன்றி