PACHAI MALAYALI
பச்சை மலையாளி
பச்சை மலையாளி எனப்படுவோர காராள கவுண்டர்
அல்லது ் மலையாள கவுண்டர் சாதியில் காணப்படும் பெரிய அண்ணன் (பெரிய மலையாளி),
நடு அண்ணன் (பச்சை மலையாளி), சின்ன அண்ணன் (கொல்லி மலையாளி) என்னும் மூன்று பிரிவுகளில் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள
பச்சை மலையை மையமாக கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் மலையை சார்ந்து வாழ்வதால் மலைவாழ்
மக்கள் எனவும் மலையாளி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
15-ஆம் நூற்றாண்டின் போது போரின் காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து
இடம்பெயர்ந்த வேளாளர்கள் என எட்கர் தர்ஸ்டன் "தென்னிந்தியாவின் குலங்களும்
குடிகளும்" என்னும் ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார். இவர்கள் தங்கள் பெயரோடு
கவுண்டர் என இணைத்துக் கொள்வதோடு தங்களை ”காராளன்” (கார்+ஆளன் = கார்மேகத்தை ஆள்பவன்)
எனவும் கூறிக்கொள்கின்றனர். இவர்கள் பரவலாக வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர்.
இவர்களுக்குள் நாவூரான், ஐய்யனார்,வாண்டையான், வேளாக்கவணன்,
காளித்திக்கவணன், பொன்னவரத்தான், காடயான், தீத்தி, ஒடுவக்கட்டையான் என இன்னும் பல குலங்கள்
காணப்படுகிறது. ஒரே குலத்தினுள் இவர்கள் திருமணம் செய்துக்கொள்வதில்லை. ஆதியில் பெரிய
மலையாளியோடும், கொல்லி மலையாளியோடும் மணவுறவு கொள்வதில்லையாயினும் தற்பொழுது மணவுறவு
கொள்கிறார்கள். இவர்கள் காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் தெய்வத்தை
முக்கிய கடவுளாக வழிபடுகின்றனர். மதூர் (சேரவராயன் மலை), வேப்படி (பச்சை மலை), பாலக்காடு
(பச்சை மலை) கிராமத்துலுள்ள வரதராஜ பெருமாள் கோவில் இதில் மிகவும் பிரச்சித்தி பெற்றதாகும்.
புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் இக்கடவுளுக்கு பெரிய விழா எடுக்கின்றனர். (வாண்டயார்
என்னும் குலம் முக்குலத்தோரில் காணப்படும் மறவர் இனத்திலும் காணப்படுகிறது).
பச்சை மலை வன்னாடு, கோம்பை நாடு, தெம்பர நாடு என
மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் பல கிராமங்களை உள்ளடக்கியிருக்கும்.
இந்த மூன்று நாடும் பட்டக்காரர் கண்காணிப்பில் வருகிறது. ஒவ்வொரு நாடும் நாட்டார் கண்காணிப்பிலிருக்கும்.
இந்த நாட்டார் பட்டக்காரருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். இவருக்கு உதவியாக காரியக்காரர்
என ஒருவர் காணப்படுகிறார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊர்க்கவுண்டர் காணப்படுகின்றார்.
இவர் நாட்டாருக்கு கட்டுப்பட்டவர் ஆவார். கங்காணி மற்றும் மூப்பன் என்னும் பதவியாளர்கள்
ஊர்க்கவுண்டருக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்.


No comments:
Post a Comment